Categories
உலக செய்திகள்

புடின் இன்னும் 3 வருடங்கள் தான் உயிர் வாழ்வார்…. கசிந்த உளவுத்துறை தகவலால் பரபரப்பு…!!!

ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் குறித்த தகவல் ரகசிய உளவாளியிடமிருந்து வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு சேவையில் பணிபுரிந்த போரிஸ் கார்பிச்கோவ் என்ற நபர், தற்போது பிரிட்டன் நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ரஷ்ய நாட்டின் உளவாளி ஒருவரிடமிருந்து ரகசியமாக தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்படி, விளாடிமிர் புடினுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் கண்ணாடி அணிந்து கொள்வதை பலவீனமாக நினைப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

எனவே, தன்னைச் சுற்றி எப்போதும் சிலரை உடன் வைத்திருந்துள்ளார். ஆனால் தற்போது அவர்களையும் அவர் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், அவர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதாகவும், உணர்சிகளை அவரால் கட்டுபடுத்த முடியவில்லை. இது மட்டுமல்லாமல் அவர் யாரையும் நம்பவும் தயாராக இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இதுபற்றி ரஷ்ய நாட்டின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அதிகாரி தெரிவித்திருப்பதாவது, விளாடிமிர் புடினுக்கு புற்று நோயின் தீவிரம் அதிகரித்து கொண்டிருக்கிறது. அவர் கண்பார்வையை இழந்து கொண்டிருக்கிறார். 2-லிருந்து 3 வருடங்கள் தான் உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவரின் கை மற்றும் கால்கள் கட்டுப்பாடின்றி நடுங்கிவிடுகின்றன.

தலைவலியும் கடுமையாக ஏற்படுகிறது. மேலும் சமீபத்தில் அவருக்கு வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது. இது மட்டுமல்லாமல் அவர் சமீபத்தில் பெலாரஸ் நாட்டின் அதிபரை சந்தித்த போது அவரின் கால்கள் கட்டுப்பாடின்றி நடுங்கியது, வீடியோவில் தெரிந்தது என்று கூறியிருக்கிறார். எனினும், ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி இதனை மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |