இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பட்டினியால் வாடும் நிலைக்கு மக்கள் சென்று கொண்டிருக்கின்றன என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மக்களை மீட்பதற்காக உதவ வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கும், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதில், முக்கியமாக உலக வங்கி நிதி உதவி கேட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த வாரம் இலங்கை வெளியுறவு மந்திரி பெய்ரீஸ் உலக வங்கியின் இலங்கை-மாலத்தீவு மேலாளர் சியோ கண்டாவை சந்தித்து பேசினார். அப்போது, அவர் இலங்கை சர்வதேச நிதியம் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள், நன்கொடை நாடுகள் மூலம் நீண்ட கால உதவி கிடைக்கும் வரை உதவுமாறு கேட்டுக் கொண்டனர். அதனை தொடர்ந்து இந்த கடினமான சூழலில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 700 மில்லியன் டாலரை வருகின்ற மாதங்களில் வழங்கப்படும் என்று சியோ கண்டா உறுதியளித்துள்ளார்.
அதனைப்போலவே ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் ஐ.நா. ஆகியவற்றுடன் இணைந்து ஏற்கனவே உறுதியளித்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று உலக வங்கி உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இலங்கையின் கொள்கைக்கு இணங்க உதவுவதில் உறுதியாக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. மேலும் 300 மில்லியன் டாலர் முதல் 60 மில்லியன் டாலர் வரை இலங்கைக்கு வழங்குவதாக சர்வதேச நிதியம் கூறியிருந்தது. இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங்கையை பெய்ரிஸ் சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில், தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவிற்கு பெய்ரிஸ் நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் அதிபருக்கான அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கான அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கும் 21 வது திருத்தம் குறித்து ஜூலியிடம் பெய்ரிஸ் எடுத்துரைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களிடம் பேசிய போது, இந்த 21 வது சட்டத்திருத்தம் செயல்படுத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறும்போது இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவும். மேலும் நிதி அதிகாரத்தை பயன்படுத்துவதில் நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்குவதற்கு, தற்போது உள்ள சட்டங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்கே இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளைப் பின்பற்றி வலுவான மற்றும் சக்திவாய்ந்த சட்டத்தை முன்மொழிவதாகவும் தெரிவித்துள்ளார்.