Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. இனி வாரத்தில் ஒருநாள் வேட்டி, சட்டை…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் மக்கள் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்ற கூடிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் தான் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று நாம் கூறி வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி, மதம்,நடனம் ஆகியவற்றை தொடர்ந்து உணவு மற்றும் உடை போன்றவற்றை பொறுத்து மாறுபடுகின்றது . அதன்படி தமிழகத்தில் பாரம்பரியமான வேஷ்டி சேலை உடையை மக்கள் அணிகின்றனர். தமிழர்களின் கலாசாரம் இதுதான்.

இந்நிலையில் தமிழக மக்களை பாரம்பரிய உடைகளை அணிய வைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தின் அரசு ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஒருநாள் கட்டாயம் வேஷ்டி, சேலை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேசிய முன்னாள் கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், 2014 ஆம் கால கட்டத்தின் போது ஜனவரி 6ஆம் தேதி வேட்டி தினமாக அரசு அறிவித்தது.

தமிழகம் முழுவதும் தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டி அணிய வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் கல்லூரி மாணவர்களிடம் இதனை கொண்டு சேர்க்க கடிதம் எழுதினேன். அப்போது 20க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் வேட்டியை அணிந்தனர்.மேலும் 70க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகளும் நம் பாரம்பரிய உடையை அணிந்து வந்தார்கள். ஏழை எளிய நெசவாளர்களின் வாழ்விற்கு உதவக்கூடிய வகையில் அரசு ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு நாள் நம்முடைய கலாசார உடைகள் அணிந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |