துலாம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாளில் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
இன்று உங்களுக்கு முற்பகல் விட பிற்பகலில் நன்மை கூடும். இன்று உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதி உதவிகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு தொழில் தொடர்பான தகராருகள் நீங்கும். இன்று நீங்கள் ஆன்மீகத்தோடு உங்களை இணைத்துக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு தெய்வீக நம்பிக்கை கூடும். இன்று நீங்கள் தெய்வத்திற்கான சிறு தொகையை செலவிட நேரிடும். நீங்கள் எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள் ஆனால் அது ஒரு நாள் உங்களுக்கு லாபத்தை அதிகரிக்கும்.
நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து கொண்டிருப்பீர்கள். இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு பார்த்து பார்த்து செய்வீர்கள். உங்களுடைய முழு முயற்சிக்கு நல்ல பலன் கண்டிப்பாக கிடைக்கும். இறைவனின் அருளும் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது.
சிலருக்கு கடன் உதவிகளும் கண்டிப்பாக கிடைத்துவிடும். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டு நீங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள். இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக இருவரும் நேரங்களை ஒதுக்குவீர்கள்.
உங்களுக்கு உங்கள் பிள்ளைகளைப் பற்றிய கல்வி பயம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும். இன்று காதலில் உள்ளவர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள். இன்று காதல் கண்டிப்பாக கைகூடும். மனமும் மகிழ்ச்சி அடையும். மாணவ மாணவியர்களுக்கு எதையும் செய்யக்கூடிய ஆற்றல் வெளிப்படும். இன்று அவர்கள் நல்ல முறையில் பாடங்களை கற்பார்கள். படிப்பில் அவர்கள் நல்ல உயிர் வினையும் பெறுவார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.