தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் தாய்மார்களுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பை உயர்த்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பு 18 முதல் 45 என்பதை 18 முதல் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.n கை கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத, மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வயது வரம்பு உயர்வு பொருந்தும். இதனால் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவார்கள்.