நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களின் திருமண நிகழ்வை நேரடியில் ஒளிபரப்பு செய்ய பிரபல ஓடிடி தளத்திற்கு உரிமையை வழங்கியுள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் வளர்ந்தது. இவர்கள் தற்பொழுது லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சென்ற மாதம் வெளியானது. மேலும் இவர்கள் இருவரும் வருகின்ற ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொள்ளப்போகின்றார்கள்.
இந்த நிலையில் நயன்தாராவும் விக்கியும் தங்களின் திருமணம் மூலம் வருமானத்தை ஈட்ட முடிவு செய்து இருக்கின்றனர். தங்களின் திருமணத்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி தளத்திற்கு கொடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர்களின் திருமணம் நேரடியாக ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என்ற செய்தி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது.