சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் திராவிட பயிலரங்கம் நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “நாட்டில் திராவிட சித்தாந்தம் தற்போது எந்தவகையில் தேவை என்பதை எடுத்துரைக்கும் விதமாக இன்றைய தலைமுறையினருக்கு திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்கும் வகையில் இந்தப் பயிலரங்கு நடைபெற்றது.
நாட்டில் தமிழகம் பொருளாதார நிலையில் திராவிட கொள்கையால் எப்படி வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை இந்த பயிலரங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக முதல்வர் கூறியதுபோல கட்டணம் உயர்த்தப்பட வாய்பில்லை. சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதில் சேவையைப் பொருத்து அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.