மாநில அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஞானசம்பந்தம் பள்ளியில் திருமால் செஸ் அகாடமி சார்பாக மாநில அளவிலான செஸ் போட்டி இரண்டு தினங்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் சேகர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் ரமேஷ் சந்த், அரிமா சங்கம் சபாநாதன், பள்ளி தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த விழாவிற்கு வந்தவர்கள் செஸ் அகடமி நிறுவனர் சீமான் வரவேற்று பேசினார்.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கழுதூர் வெங்கடேஸ்வரா கல்லூரி தாளாளர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார். இந்த போட்டியில் கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் இந்த விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.