தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. அதனைப்போலவே பொதுமக்கள் பலரும் பொருளாதார நெருக்கடியில் இருந்ததால் பலரும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர். அதற்கு ஏற்றவாறு தமிழக அரசும் பல விதமான சலுகைகள் மற்றும் நன்மைகளை அளித்தது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் முடிவடைந்த நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.
அதன்படி வருகின்ற ஜூன் 13ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கல்வி ஆண்டிற்கான அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது. அடுத்த கல்வியாண்டில் 10,000 பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதலாக தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 13ம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும், அதே நாளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.