Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“உடனடியாக சிலைகளை மீட்க வேண்டும்” முன்னாள் ஐ.ஜி.யின் அதிரடி அறிக்கை….!!!!

முன்னாள் ஐ.ஜி. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒலக்கூர் காவல் நிலையத்தில் வைத்து  முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒலக்கூர் பகுதியில் கி.பி 9-ஆம் நூற்றாண்டில் ராஜேந்திரதேவனால் கட்டப்பட்ட அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை7 சிலைகள்  இருந்துள்ளது. ஆனால்  5 சிலைகளை  அறநிலை துறை அதிகாரிகள் வேறு இடத்திற்கு பொதுமக்களின் அனுமதியுடன் மாற்றினர். ஆனால் இதுவரை அந்த சிலைகள் கோவிலில் ஒப்படைக்கப்படவில்லை.

இந்நிலையில் அந்த 5 சிலைகளும் சென்னை, மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது. இந்த சிலைகள் குறித்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை. இதனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருக்கிறார்கள். எனவே அதிகாரிகள் கடத்தப்பட்ட சிலையை விசாரணை நடத்தி மீட்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |