மோட்டார் சைக்கிளில் பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் டீ கடை ஒன்று அமைந்துள்ளது.இந்த டீக்கடைக்கு தினந்தோறும் ஏராளமானோர் டீ குடிக்க வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஒருவர் மோட்டார் சைக்கிளில் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அவரின் மோட்டார் சைக்கிளில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளின் ஒவ்வொரு பாகத்தையும் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கில் 2 அடி நீளம் கொண்ட பச்சை நிற பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அந்த பாம்பை அடித்து கொன்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.