Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இதுவரை யாரும் வரவில்லை” ஏலம் விடப்படும் மோட்டார் சைக்கிள்கள்…. அறிக்கை வெளியிட்ட காவல்துறையினர்….!!!!

காவல்துறையினர் பறிமுதல் செய்ய மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் உள்ள காவல் துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கும்மிடிபூண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 5 காவல் நிலைய காவல்துறையினர்  பறிமுதல் செய்த 256 மோட்டார் சைக்கிள்களை கேட்டு  இதுவரை யாரும் வரவில்லை. இதனால் வருகின்ற 31-ம் தேதி காலை 10 மணிக்கு கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் வைத்து மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படுகிறது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்வோர் ஆதார் அட்டை அல்லது அடையாள அட்டை கொண்டு வந்து ஆயிரம் ரூபாய் முன் பணமாக செலுத்த செலுத்த  வேண்டும். மேலும் ஏலம் எடுக்க முடியாதவர்களின் பணம்  திரும்ப வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |