Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு புதிய அறிவுறுத்தல்…. திரும்பப் பெற்ற மத்திய அரசு…!!!!!!!!

ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதனால் ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் ஆதார் நகலை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. ஓட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து ஆதாரங்களை சேகரிக்கவும் அல்லது வைத்திருக்க அனுமதி இல்லை.

எனவே தனியார் நிறுவனங்களின் ஆதார் கார்டை பார்க்க வேண்டும் என கூறினாலோ அல்லது உங்கள் ஆதார் கார்டு நகலை பெற விரும்பினாலோ  ஆதார் ஆணையத்திடம் இருந்து சரியான உரிமம் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். மேலும் பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது மையங்களால் இ ஆதார் டவுன்லோட் செய்வதை தவிர்க்க வேண்டும்.  ஒருவேளை அப்படியே டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தேவையான நகல் எடுத்ததும்  கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்த நகலை நிரந்தரமாக டெலிட் செய்து விடவேண்டும்.

ஆதார் கார்டு நகல் சமர்ப்பிப்பதற்கு பதிவாக ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் காட்டும் ஆதார் அட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த செய்தி இன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் தகவல் திருட்டு தொடர்பாக மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் தரப்பிலிருந்து பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன. அதாவது ட்விட்டரில் ஆதார் ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது.

ஏற்கனவே ஆதார் நகலை பல இடங்களில் கொடுத்துள்ள நிலையில் இப்போது இப்படி சொல்கிறார்கள் என பலர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய அரசு திரும்பப் பெற்றது. ஆதார் இணையத்தின் பெங்களூர் பிராந்திய அலுவலகம் வெளியிட்ட செய்தி அடிப்படையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் இந்த சுற்றின் மூலமாக தவறான புரிதலுக்கும் தவறான விளக்கம் அளிக்கப்படும் வாய்ப்பிருப்பதால் உடனடியாக திரும்பப் பெறுவதாகவும் மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |