அட்லாண்டிக் கடலிலுள்ள பெர்முடா முக்கோணம் உலகின் மர்மமான முக்கோணமாக கருதப்படுகிறது. சென்ற பல வருடங்களாக இந்த முக்கோணத்தில் ஏலியன்கள் வசித்து வருவதாகவும், இதனை கடக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மர்மமான முறையில் காணாமல் போவதாகவும் அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்று கடந்த 1960 ஆம் ஆண்டு செய்தி ஒன்றை வெளியிட்டது. பல வருட காலமாக பெர்முடா முக்கோணம் பற்றிய வதந்திகள் வலைதளங்களில் உலாவருவதை காணமுடியும்.
அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் முக்கியமான சரக்கு கப்பல்கள் இந்த முக்கோணத்தை கடந்து செல்கிறது. இந்த சரக்கு கப்பல்களுக்கு இதுவரையிலும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனினும் இன்றும் பெர்முடா முக்கோணத்தை ஓர் ஆபத்தான விஷயமாக பார்ப்பவர்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது அமெரிக்க கப்பல் நிறுவனம் ஒன்று தன் வாடிக்கையாளர்களுக்கு பெர்முடா முக்கோணம் பற்றிய தகவலை அளித்துள்ளது.
பெர்முடா முக்கோணத்தை கடந்து போகும் தங்களது சொகுசு கப்பல் ஒரு வேளை காணாமல் போனால் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை மீண்டுமாக அவர்களிடம் திருப்பி அளிப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. பெர்முடாமுக்கோணத்திற்கு இந்த கப்பல் சென்று காணாமல் போனால் பின் வாடிக்கையாளர்களின் பணம் மீண்டும் அவர்களது கணக்குக்கு செலுத்தப்படுவதால் என்ன பயன்? என இப்போது சமூகவலைதளங்களில் பலர் இந்த அறிவிப்பை கேலியடித்து வருவது குறிப்பிடத்தக்கது.