நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் இன்று காலை 9.55 மணிக்கு பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு சென்ற விமானம் மாயமாகியுள்ளது. தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் சரியாக இன்று காலை 9.55 மணிக்கு சென்ற போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்..
இந்த இரட்டை எஞ்சின் கொண்ட விமானத்தை பொருத்தவரை பறந்து கொண்டிருந்தபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாயமான விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உட்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர்.