Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

OMG: கிரிக்கெட் பந்து நெஞ்சில் பட்டதால்….. 11 வயது சிறுவன் பலி…. அதிர்ச்சி…!!!!!

ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடிய போது, நெஞ்சில் பந்து விழுந்ததால் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் அருகே உள்ள வன்னிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார். இவரது மகன் சுபாஷ் குமார். அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சுபாஷ் குமாருக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் நேற்று தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுபாஷ் குமாரின் நெஞ்சில் பந்து விழுந்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை, பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சுபாஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |