குழந்தை பிறந்தவுடன் பிறப்பு சான்றிதழ் எடுப்பது அவசியம். ஏனெனில் தற்போது பிறப்பு சான்றிதழ் ஏராளமான விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பிறப்பு சான்றிதழ் கட்டாயம் கேட்கப்படுகிறது. தமிழக அரசின் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தாய்மார்களுக்கு RCH எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது கிராம சுகாதார செவிலியர் மூலம் கர்ப்ப பதிவு செய்து இந்த RCH எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதை மேலும் எளிதாக்கும் வகையில் PICME 2.0 இணையதளத்தில் கர்ப்பிணிகள் தாங்களே சுயமாக பதிவு செய்து RCH எண் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் கர்ப்ப பதிவு முதல் குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகள் வரை பதிவு செய்யும் வசதி உள்ளது.