லிப்ட் அறுந்து விழுந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெத்திக்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு கேட்டரிங் பணி செய்வதற்காக வந்த ஷீத்தல், விக்னேஷ், ஜெயராம் ஆகிய 3 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2-வது மாடியில் அமைந்துள்ள லிப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த ஷீத்தல் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த விக்னேஷ், ஜெயராமன் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மண்டபம் மேலாளரான திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆப்ரேட்டர் கக்கன் ஆகிய 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.