Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான படகு… மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்…!!!

இந்தோனேசியாவில் 43 நபர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்து விழுந்ததில் 26 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய நாட்டின் மகஸ்ஸரில் இருக்கும் பாடெரே என்னும் துறைமுகத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை அன்று புறப்பட்ட படகு ஒன்று திடீரென்று நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து நேற்று படகு சென்றடைய வேண்டிய இடத்திற்கு செல்லாததால் படகை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதில் 17 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 26 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களை தேடும் பணி நடக்கிறது. அந்த படகில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வானிலை மோசமாக இருந்ததும் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |