Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக வெளியேறிய குடும்பத்தினர்….. அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீ…. சென்னையில் பரபரப்பு…!!

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் கலாசாத்திரம் 2-வது அவென்யூவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் 4-வது மாடியில் நேற்று திடீரென தீ பற்றி எரிந்து அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சலீம் பாஷா, சகிதா ஆகியோர் வேகமாக வீட்டைவிட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இவ்வாறு தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்ததால் மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Categories

Tech |