பாதுகாப்பு துறையின்கீழ் பென்சன் வழங்கும் ஓய்வூதியதாரர்கள் மே 25ஆம் தேதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதனால் விரைவில் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்கும்படி பென்சனர்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மேலும் எல்லா ஓய்வூதியதாரர்களும் பென்சன் பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு வருடமும் ஜீவன் பிரமாண பத்திரம் எனப்படும் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
வாழ்வு சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். இந்த சுழலில் மே 25ஆம் தேதி நிலவரப்படி 34 ஆயிரத்து 636 ஓய்வூதியர்கள் இன்னும் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. இதனை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது. 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் இன்னும் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்காமல் இருக்கும் நிலையில் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 25ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமே சுமார் 58,000 ராணுவ ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் வரவில்லை. இது பற்றி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவரும் ஓய்வூதியதாரர்களும் புகார் அளித்துள்ள நிலையில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக பென்சனை வழங்கியுள்ளது. மேலும் மே 25ஆம் தேதியுடன் கடைசி தேதி முடிவடைந்த நிலையில் இன்னும் 34,636 பேர் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்காமல் இருக்கின்றனர். எனவே இவர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. https: // jeevanpraman.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்கலாம். மேலும் அருகில் உள்ள பொது சேவை மையங்கள் வாயிலாகவும் வாழ்வு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.