இலங்கையில் 21-ம் சட்டத்திருத்தம் விரைவாக நிறைவேற்றப்படும் என்று பிரதமரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில், அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகமான அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து 21ஆம் சட்ட திருத்த மசோதா விரைவாக நிறைவேற்றப்படும் என்று அரசியல் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்திருக்கிறார்கள்.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையில் நடந்தது. சட்டத்திருத்த மசோதா தொடர்பில் விவாதம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 21ஆம் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று அனைவரும் கருத்து கூட்டத்தில் தீர்மானித்திருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதியன்று இந்த கூட்டம் மீண்டும் நடத்தப்பட்டு இறுதி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, பிரதமர் விக்ரமசிங்கே அரசியலமைப்பின் 21- ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக தீர்மானித்தது மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.