எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெக்கார்டு கொடுக்கும் முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஜே. சூர்யா. மேலும் இவர் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வெற்றி படங்களாக்கியுள்ளார். அண்மையில் வெளியான இவரின் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. மாநாடு திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் சென்ற 2014ஆம் வருடம் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் இணைந்து படம் பண்ணலாம் என கூறி எஸ்ஜே சூர்யாவுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்து இருக்கின்றார். அதன்பிறகு எஸ்.ஜே.சூரியா படம் பண்ணும் முடிவில் இல்லை என பணத்தை திருப்பிக் கொடுத்து இருக்கின்றார். ஆனால் தயாரிப்பாளர் பணத்தை வாங்க மறுத்து பிறகு வாங்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் அந்த தயாரிப்பாளர் ஒரு கோடி ரூபாய்க்கு வட்டி போட்டு பல மடங்கு பணம் கேட்கிறார். எஸ் ஜே சூர்யாவோ ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் கூட தரமுடியாது என கூறியுள்ளார். இதனால் அந்த தயாரிப்பாளர் எஸ்.ஜே.சூர்யாவை சினிமாவில் நடிக்க விடாமல் ரெட் கார்டு கொடுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகின்றது. இதனால் காண்டான எஸ்.ஜே.சூர்யா நடிப்பே வேண்டாம். ஒரு டீ கடை வைத்துப் பிழைத்துக் கொள்கிறேன் என கூறிவிட்டாராம்.