Categories
மாநில செய்திகள்

“நேற்றைய பயணம் மறக்க முடியாதது”… தமிழ்நாடு வந்த பிரதமர்…. வெளியிட்ட டுவிட்டர் பதிவு…!!!!!

தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக ஒரு நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி போன்றோர் வரவேற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு பாஜகவினரும் பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளனர்.

மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் வழியில் காரில் நின்றவாறு  மக்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் வருகை பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. நேற்றைய தமிழ்நாடு பயணம் மறக்க முடியாத பயணமாக அமைந்தது என தெரிவித்திருக்கின்றார்.

Categories

Tech |