சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீர் விற்பனைக்கு வர உள்ளது. அதாவது கழிவு நீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரிலிருந்து இந்த பீர் தயாரிக்கப்படுகின்றது. முதலில் கழிவுநீர் சிங்கப்பூர் நீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திற்கு பம்ப் செய்யப்பட்டு, அதன்பிறகு வடிகட்டப்பட்ட சுத்தமான நீராக மாறும். பீர் தயாரிப்புக்கு பொதுவாக அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகின்றது.இந்த மதுபானத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.
சிங்கப்பூர் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை சவாலை எதிர்கொண்டு வரும் நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நியூ வாட்டர் (கழிவு நீரில் இருந்து வடிகட்டப்பட்ட திரவம்) எனும் மறுசுழற்சி முறையை முன்னெடுத்துள்ளது. இதன் மூலமாக 40 சதவீதம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அந்த நாட்டின் தண்ணீர் வாரியம் தெரிவித்துள்ளது. இது சுகாதாரமற்ற முறையாக தோன்றினாலும் நியூ வாட்டர் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பாக பெரிதும் பரிசோதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு அதன்பிறகு உபயோகத்திற்கு வருகின்றது. அந்த நாட்டில் உள்ள கடைகள் மற்றும் பார்கள் இந்த உயர் விற்பனைக்கு வர உள்ளது.