ஸ்வீடன் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் ஒரு கைதியிடம் எதிர்பாராதவிதமாக ஒரு துப்பாக்கி கிடைத்துள்ளது. அந்தத் துப்பாக்கி கிடைத்தவுடன் யாராக இருந்தாலும், அதை வைத்து சிறைச்சாலையில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை தான் யோசிப்பார்கள். ஆனால் அந்த கைதி ஒரு காவலரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி எனக்கு 20 பீட்சா வேண்டும் என கேட்டுள்ளார்.
இதைக் கேட்ட அனைத்து காவலர்களும் மிகவும் ஆச்சர்யப்பட்டனர். இதனையடுத்து அந்த கைதிக்கு 20 பீட்சா வாங்கி கொடுத்துள்ளனர். அந்தக் கைதி அந்த பீட்சாவை சாப்பிட்டு முடித்தவுடன் துப்பாக்கியை காவலரிடம் கொடுத்துவிட்டார். மேலும் துப்பாக்கியை வைத்து சிறையில் இருந்து தப்பிக்காமல் அதை வைத்து சாப்பாடு வாங்கி சாப்பிட்ட அந்த கைதியை பார்க்கும்போது சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.