சித்ராவை எப்படி மிஸ் பண்றோமோ அதுபோலவே நடிகை நட்சத்திராவையும் மிஸ் பண்ணுவோம் என ஸ்ரீநிதி கூறியுள்ளார்.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஸ்ரீநிதி. இவரின் தோழி நட்சத்திரா. இவர் சின்னத்திரையில் நடிகையாக வலம் வருகின்ற நிலையில் ஸ்ரீநிதி நட்சத்திரா பற்றி வீடியோ ஒன்றை விஸ்டாவில் பதிவிட்டு விட்டு அந்த வீடியோவை நீக்கிவிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது, நட்சத்திராவுக்கு ஒரு பையனை பிடித்துள்ளது. அவருடைய பெயரை நான் சொல்ல விரும்பவில்லை.
இவர் ரொம்ப நல்லவரா இருக்காரு பாரு நட்சத்திரா, சூட்டில் இருக்காருன்னு சொன்னேன். அவருடன் பேசினாள். ஒரு மாதத்திலேயே கல்யாணம் முடிவு பண்ணிட்டான் அவன். அது எப்படி என்று தெரியவில்லை. இந்த மாதிரி ஒரு பெண்ணை ஏன் விடனும்னு புடிச்சி வச்சிட்டான். நட்சித்திராவிற்கு சென்ற நவம்பர் 18ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அது எங்களுக்கு தெரியாது. எனக்கு சித்ரா என்ற ஒரு தோழி இருந்தாங்க அவங்க ஒருவரை காதலித்தார்கள். சித்ராவிடம் பேசு பேசு என எனது நண்பர்கள் நிறைய பேர் சொன்னார்கள்.
ஆனால் நான் பேசவில்லை அவர்களுடைய பர்சனல் என விட்டுவிட்டேன். என்னுடைய பிறந்த நாளுக்கு அடுத்த நாள் சித்ரா இறந்துவிட்டார்கள். அதுதான் என் வாழ்க்கையின் மோசமான நாள். சித்ராவுக்கு இப்படி நடந்ததில் இருந்து எனக்கு பயம். அதனால் நட்சத்திராவின் விஷயம் என்னை பாதித்தது. அவளே அதை விட்டுவிட்டு வரணும் என்று நினைத்தேன். தன்னைத்தானே பாவம் என கருதும் பெண் நட்சத்திரா. அதனால் அவரை இப்படி மிஸ் யூஸ் பண்ணுகிறார்கள். நட்சத்திராவின் வாழ்க்கை மட்டும் அந்த மனிதரோடு இருந்தால் சித்ராவை எப்படி மிஸ் பண்றோமோ அதுபோலவே நட்சத்திராவையும் மிஸ் பண்ணுவோம். நான் எவ்வளவோ முயற்சி செய்தேன் என கூறியுள்ளார்.