Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ஆகாஷோட பையன் ப்ரோ”…. வனிதா மகன் கூறிய ஒற்றை வார்த்தை… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!!

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதன்பின்னர் அவருக்கு   சின்னத்திரையிலிருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில் வனிதா பற்றி அவரது மகன் அளித்திருக்கின்ற  செய்தி  இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி இருந்தது. ஆனால்  அதில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் வலைத்தளத்தில் பலரும் பதிவுகளை பகிர்ந்து வந்தனர்.

அதன்பின் பிக்பாஸில் இருந்து வெளியேறி வந்த பிறகு குக்கு வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் ஜோடிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இதனை தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் அனிதா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். அனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி அதன்பின் அந்த இரண்டு திருமணமும் விவகாரத்தில் முடிந்துள்ளது. அதன் பின்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின் அவரையும் விட்டுப் பிரிந்துள்ளார். தற்போது தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவரது மகனான  ஸ்ரீஹரி தன் தாத்தா விஜயகுமாருடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது 21 ஆவது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். தனது மகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வனிதா பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ஸ்ரீஹரியிடம் வனிதாவுடைய பையனா நீங்க என்ன கேட்டிருக்கின்றார். இதற்கு ஸ்ரீஹரி நான் ஆகாஷோட பையன் ப்ரோ என பதிலளித்துள்ளார். மகனுக்கு உருகி உருகி வனிதா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிலையில் ஸ்ரீஹரி இவ்வாறு தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |