உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை குறைந்து வந்தது. அதனால் முக்கிய வழித்தட ரயில் பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டதால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தபோது மீண்டும் முழுவதுமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சென்றடையும் முகவரியும் கட்டாயமாக கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது ரயிலில் பயணம் செய்யும் நபர் ஒரு வேளை கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தால் அந்த நபர் சென்றடைந்த முகவரியை கண்டுபிடிக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது கொரோனா குறைந்த நிலையில் அனைத்து ரயில் சேவைகளும் துவங்கப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் ரயிலில் பயணம் செய்ய இருக்கும் பயணி ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சென்றடையும் முகவரி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக கூடுதல் சில வசதிகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏசி ரயில் பெட்டிகளில் தலையணை, போர்வை வழங்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.