தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து படிப்படியாக குறைந்ததையடுத்து குறைந்ததால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் வழக்கம்போல திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தற்போது திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டுள்ளது. ஒன்று முதல் ஒன்பது வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு ஜூன் – 13 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்குப் பின்னர் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளததன் காரணமாக ஆசிரியர்கள் பணியிடத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டது. அதன்படி தற்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள் உள்ளனர்.
மேலும் தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பது மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அதற்குள் இந்த கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஜூன் மாதம் 13ம் தேதி நீதிமன்றம் வெளியிடும் அறிவிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அதன்பின் அரசாணை வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.