மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள கணக்கீடு தொடர்பான ஃபார்முலா விரைவில் மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்ஷன் போன்ற அனைத்து விஷயங்களும் தற்போது ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் நிர்ணயிக்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே தற்போது சம்பளம், பென்ஷன் வழங்கப்பட்டு வருகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் நிர்ணயம் செய்யப்படும். ஆனால் அடிப்படை சம்பளம் என்பது மாற்றம் இருக்காது.
அகவிலைப்படி உயர்வை பொருத்து மொத்த சம்பளத்தில் உயர்வு இருக்கும். பணவீக்கத்தை பொருத்து அகவிலைப்படி மாற்றம் இருப்பது போல அடிப்படை சம்பளத்தில் மாற்றும் இருக்க வேண்டும் என்ற வகையில் புதிய சம்பள பார்முலா உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்த புதிய பார்முலா அமலுக்கு வந்தால் ஊழியர்களின் அடிப்படை சம்பளமானது பணவீக்கம், வாழ்க்கைச் செலவுகள், ஊழியர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை பொருத்து அமையும். எனவே ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் சம்பளம் உயரும். 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஃபார்முலா அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் 8 வது ஊதியக்குழு வந்த பிறகு 2026 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் இது தொடர்பாக அரசு இன்னும் எந்த ஆலோசனையும் ஈடுபடவில்லை.