மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஆர்.பெத்தாம்பட்டியில் துரைசாமி(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டு நெசவுத் தொழிலாளி ஆவார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சாந்தி என்ற மகளும், கோபி என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் துரைசாமி தனது மோட்டார் சைக்கிளில் ஆட்டையாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் எஸ்.பாலம் வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சேலம் நோக்கி வேகமாக சென்ற கார் துரைசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரைசாமியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.