Categories
மாநில செய்திகள்

கராத்தே, சிலம்பம் போட்டிகள்… சாதனை படைத்த தூத்துக்குடி மாணவர்கள்….பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு….!!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோலவே தூத்துக்குடி வேலன் பள்ளியில் குளோபல் நிறுவனம் நடத்திய 3 மணி நேர தொடர் சிலம்பம் விளையாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்த்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்று உள்ளனர்.

அதனை தொடர்ந்து இவர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாணவர்கள் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்று வாழ்த்தினார். மேலும் நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர், பயிற்சியாளர்கள், போலீஸ்சார்கள் உடன் இருந்தார்கள்.

Categories

Tech |