Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை…. 5 அடுக்கு பாதுகாப்பு பணி தீவிரம்….!!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை துறையில் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறு வந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கிற்கு வருகிறார். பிரதமர் 5.45 மணி முதல் இரவு 7 மணி வரை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சி 31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார். இந்த விழா தமிழக கவர்னர் ஆரியன் ரவி முன்னிலையில் நடைபெறுகிறது. அதுமட்டுமில்லாமல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். மேலும் சென்னை வரும் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை குறித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி மனு அளிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படள்ளது. மேலும் சென்னையில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |