Categories
தேசிய செய்திகள்

சென்னை வந்த குடியரசுத் துணைத் தலைவர்…. விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்பு…!!!!!!

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைய இருக்கும் கருணாநிதி சிலை சென்னைக்கு வந்துள்ளது. இந்த சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வருகின்ற 28 ம் தேதி திறந்து வைக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் திருவாரூரில் முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையார் மகனான கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

மேலும் ஜூன் மூன்றாம் தேதி அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீர கலைஞரின் கலைமிகு  சிலை நிறுவப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்தநிலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சிலை அமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதன்படி ரூபாய் 1.56 கோடி செலவில் இந்த சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் பெரியார், அண்ணா சிலைக்கு நடுவில் கலைஞர் சிலை அமைய இருக்கின்றது. இந்த கலைஞர் சிலையை திறந்து வைத்து உரையாற்றவுள்ளார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. மே 28 ம் தேதி சனிக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை சென்னையில் விமான நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை செயலாளர் இறையன்பு டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் வரவேற்றிருக்கின்றனர்.

Categories

Tech |