Categories
தேசிய செய்திகள்

பள்ளி முழுவதும் சிவப்பு நிறத்தில் SORRY…. SORRY…. பீதியை கிளப்பும் சம்பவம்….!!!!

பெங்களூருவில் உள்ள காமாக்ஷிபல்யா பகுதியில் சாந்திதாமா என்ற தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் இன்று பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் என அனைத்து இடங்களிலும் சாரி… சாரி… என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தன. இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர்.

பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் டெலிவரி பாய் வேடத்தில் வந்த இரண்டு நபர்கள் செல்லும் காட்சி பதிவானது. இந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காதல் தோல்வியால் பள்ளி மாணவர்களை யாராவது இப்படி எழுதி உள்ளார்களா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி சுவர் முழுவதும் Sorry என எழுதப்பட்டு சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |