நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு பேனர்கட்ட சென்ற போது, சரக்கு வாகனத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் வசித்து வந்தவர் நவீன்குமார்(23). இவர் தன்னுடைய நண்பரான கார்த்திக் பிறந்தநாளுக்காக ஆங்காங்கே பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது சரக்கு வாகனத்தில் பேனரை ஏற்றிக்கொண்டு அதில் தொங்கிய படி சென்று கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் செல்லும் போது தவறிக் கீழே விழுந்து விட்டார்.
இதில் படுகாயமடைந்த அவரை உடன் சென்ற நண்பர்கள் மீட்டு பைக்கில் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நவீன்குமார் பரிதாபமாக உயிரழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.