விசா முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த புகாரில் சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்க ரூபாய் 50 லட்சம் கையூட்டு பெற்றதாக கார்த்தி சிதம்பரத்தின் கூட்டாளி ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஏற்கனவே கைதாகியுள்ளார்.
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதானால் 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.