Categories
சினிமா

“நடிகை பலாத்கார வழக்கு பற்றி”…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

மலையாள சினிமா நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். அதாவது, நடிகர் விஜய்பாபு தன்னை வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி இருந்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் நடிகர் விஜய்பாபு மீது வழக்குபதிவு செய்தனர். இதையறிந்த நடிகர் விஜய் பாபு, வெளிநாடு தப்பி சென்றார்.

ஆகவே அவரை பிடிப்பதற்காக கேரளா காவல்துறையினர் இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடினர். இதையடுத்து காவல்துறையினரின் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்ததை அடுத்து நடிகர் விஜய்பாபு ஜார்ஜியா நாட்டுக்கு தப்பிசென்றதாக கூறப்பட்டது. எனவே அங்கு இருந்து அவரை இந்தியா அழைத்துவர காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

இதனிடையே இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கேட்டு நடிகர் விஜய்பாபு கேரள நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. அதன்பின் மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய் பாபுவுக்கு முன் ஜாமீன் வழங்க அவர் கேரளா திரும்ப வேண்டும். இதற்குரிய விமான டிக்கெட்டை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர் டிக்கெட்டை தாக்கல் செய்த பின், அவரது ஜாமீன் மனு பரிசீலனை செய்யப்படும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

Categories

Tech |