Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: 45 வயது பெண் பலாத்காரம்…… நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்…..!!!!

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மாவட்டம் வடகாடு மீனவ கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீனவப் பெண்கள் அப்பகுதியில் கிடைக்கும் கடல்பாசியை சேகரித்து அதை விற்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் வடக்கு பகுதியை சேர்ந்த சந்திரா என்ற 45 வயது பெண் நேற்று முன்தினம் கடல் பாசி சேகரிக்க சென்றார். அப்போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 6 வடமாநிலத்தவர்கள் சந்திராவை கேலி செய்துள்ளனர். அத்துடன் இறால் பண்ணைக்கு அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் அந்த பெண்ணை இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர்.

இந்த கொலையை மறைக்கும் நோக்கில் உடலை தீ வைத்து எரித்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, சந்தேகத்தின் அடிப்படையில் 6 வடமாநிலத்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் அப்பகுதி மக்கள் அந்த ஆறு பேரையும் சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |