Categories
சினிமா

மீண்டும் அதையே செய்ய போகும் தனுஷ்…. இப்படி நடக்குனு நினைச்சு கூட பாக்கல…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

இந்திய திரையுலகில் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹாலிவுட், பாலிவுட் வரை சென்று வெற்றியை பெற்றுள்ளார். தமிழில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் பள்ளி பயிலும் மாணவராக அறிமுகமாகி தற்போது உலகம் அறிந்த நடிகராக வளர்ந்து வருகிறார். இவர் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்கி வருகின்றார். இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து தற்போது வெற்றியை எதிர்நோக்கும் வகையில் தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் மற்றும் வாத்தி ஆகிய படங்களை மிகவும் நம்பியுள்ளார். இதில் இவர் நடிக்கும் வாத்தி திரைப்படம் தமிழில் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகின்றது.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ராஜ்கிரண் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான ப.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும். இயக்குனரான முதல் படத்திலேயே வெற்றி கண்ட, இவர் பல படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது அடுத்த ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான அன்புச்செழியன் தயாரிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இந்த தகவல் சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தயாரிப்பாளர் அன்புச்செல்வனுக்க்கும் தனுஷுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக பேசப்பட்டது. தற்போது இவர்கள் இணையபோகின்றார்கள் என்ற தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |