Categories
தேசிய செய்திகள்

கோதுமையைத் தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை?….. வெளியான முக்கிய தகவல்….!!!!

உள்நாட்டில் போதிய அளவில் சக்கரை கையிருப்பில் இருப்பதை உறுதி செய்வதற்கும் விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் சர்க்கரை ஏற்றுமதியை கண்காணிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து சர்க்கரை ஆலைகள் சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் இயக்குனரிடம் அனுமதி பெற்று சர்க்கரையை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அனைத்து சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் எவ்வளவு சக்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறித்து விவரங்கள் தினம்தோறும் உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு ஆன்லைன் மூலமாக தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விலையை கட்டுக்குள் வைப்பதற்கு கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |