தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்டு தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில் தேர்வுகள் அனைத்தும் விரைவில் முடிய உள்ளதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 83 மையங்களில் திருத்தப்பட உள்ளதாகவும், மொத்தம் 50 ஆயிரம் ஆசிரியர்கள் 10 நாட்களில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.