கடந்த 2020-ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் போட்டிக்கு 7 பேர் இறுதி சுற்றில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கட்டாரை சேர்ந்த பார்ஷி என்பவரும் இத்தாலியைச் சேர்ந்த தம்பீர் என்பவரும் வெற்றி பெற்றனர். இதனால் 2 பேரிடமும் மீண்டும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தயாராகுமாறு நடுவர்கள் கூறினர். ஆனால் 2 பேரும் பதக்கத்தை பெற்றுக் கொள்கிறோம் என கூறிவிட்டனர்.
இதன் காரணமாக 2 பேருக்கும் ஒவ்வொரு பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் இதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்ட போது நாங்கள் 2 பேரும் 11 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். எங்களுடைய லட்சியம் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும். நாங்கள் நினைத்தது போன்றே 2 பேரும் போட்டியில் கலந்துகொண்டு பதக்கத்தை வென்று விட்டோம் என கூறினர்.
பொதுவாக நண்பர்கள் தங்களிடம் இருக்கும் ஒரு சிறிய பொருளை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் இரு வெவ்வேறு நாட்டை சேர்ந்த நண்பர்கள் தங்களுடைய வெற்றியையே பகிர்ந்து கொண்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களின் நட்பை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.