Categories
சினிமா தமிழ் சினிமா

18 ஆண்டுக்கு பின் …… ”இயக்காத திரைப்படம்” வெளியாகிறது …!!!

 மணிரத்னம் இயக்காத திரைப்படம் 18 ஆண்டுக்கு  பின்  வெளியாகிறது.

மணிரத்தினம் அவர்களின்  தயாரிப்பில் உருவான ’வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படம்  மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம்   பிப்ரவரி 7 தேதி ரிலீஸ் ஆக உள்ளது  என  இந்த படத்தின் டீசரில் தெரியபடித்திருந்தது.  அதன்படி  இந்த  திரைப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 7  என  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  மணிரத்னம் அவர்கள் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்  தயாரித்துள்ளது. ஆனால் மணிரத்னம் இயக்காத திரைப்படம் ஒன்று 18 ஆண்டுகள் கழித்து  மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில்   வெளியாகிறது என்பதும் அந்த படம் தான்  ‘வானம் கொட்டட்டும்’ படம்  என்று  குறிப்பிடத்தக்கது. அதே போல் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில்  கடந்த 2002ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்காத ‘பைவ்ஸ்டார்’ என்ற படம்  சுசிகணேசனின்  இயக்கத்தில்  வெளியிடப்பட்டது.

விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ்,சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு பாக்கியராஜ்,மதுசூதன ராவ், பாலாஜி சக்திவேல்,  என  பலர் நடித்துள்ளனர். தனா  இத்திரைப்படத்தை  இயக்கியுள்ளார். சித்ஸ்ரீராம் இசையில் சங்கத்தமிழன் படத்தொகுப்பில் ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவில்  இத்திரைப்படமானது  உருவாகியுள்ளது.

Categories

Tech |