Categories
உலக செய்திகள்

வடகொரியாவிடம் பேசும் காலம் முடிந்துவிட்டது…. தென்கொரிய அதிபர் அதிரடி…!!!

தென்கொரிய நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் யூன் சுக் இயோல், வடகொரியாவை சமாதானம் செய்யக்கூடிய காலம் முடிந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.

வடகொரியா மற்றும் தென்கொரியா கடந்த 1950-களில் நடைபெற்ற போரில் தனி நாடுகளாக பிரிந்து விட்டன. அன்றிலிருந்து இரண்டு நாடுகளுக்கிடையே மோதல் நிலவிக் கொண்டிருக்கிறது. எனவே, கடந்த ஐந்து வருடங்களாக தென்கொரிய நாட்டின் அதிபரான மூன் ஜே இன், வடகொரியாவுடன் சமரசம் செய்ய பல வழிகளில் முயன்றார்.

எனினும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், சமீபத்தில் வடகொரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் வட கொரிய நாட்டை கடுமையாக எதிர்க்கக்கூடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் யூன் சுக் இயோல் என்பவர் வெற்றியடைந்து அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார்.

பதவி ஏற்பு விழாவில் அவர் வடகொரிய நாட்டுடன் பேச தயாராக உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், வடகொரிய நாட்டை சமாதானம் செய்யக்கூடிய காலம் முடிந்தது. எனவே, தென் கொரியா மற்றும் வட கொரியா நாடுகளுக்கிடையே எந்தவித பேச்சுவார்த்தையையும் கிம் ஜாங் உன் மட்டும் தான் தொடங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார

Categories

Tech |