Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. விழுப்புரம் – காட்பாடி இடையே பயணிகள் ரயில் இயக்கம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு இரண்டு வருடங்களுக்குப் பின் நேற்று பயணிகள் போக்குவரத்து தொடங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக விழுப்புரம் காட்பாடி இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக பயணிகள் ரயில் போக்குவரத்து இயங்கவில்லை.

இந்த நிலையில் விழுப்புரம் – காட்பாடி ரயிலை  இயக்குவதற்கு  தென்னக ரயில்வே அனுமதியளித்துள்ளது. அதன்படி காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் புறப்பட்ட பயணிகள் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு காலை 9 :10 மணிக்கு வந்தது.  இதனைத் தொடர்ந்து மீண்டும் நேற்றிரவு 7:05 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் புறப்பட்டு காட்பாடிக்கு சென்றுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த ரயில் சேவை இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Categories

Tech |