இந்தியா, இலங்கைக்கு அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல் நேற்று அந்நாட்டுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா அந்நாட்டிற்கு பிப்ரவரி மாதம் 3750 கோடி ரூபாய் மற்றும் கடந்த மாதமும் அதே தொகையை கடனாக அளித்தது. இதற்கு முன்பு டீசல் மற்றும் பெட்ரோலை பல முறை இந்தியா அனுப்பியிருக்கிறது.
கடந்த 21-ஆம் தேதியன்று இந்தியா 40 ஆயிரம் டன் டீசலை, இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், மேலும் 40 ஆயிரம் டன் பெட்ரோலை கப்பல் வழியாக இந்தியா, இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. அந்தக் கப்பல் கொழும்பு நகரத்தை நேற்று அடைந்ததாக இந்திய தூதரகம் கூறியிருக்கிறது.