Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் பணம் வராது?…. உடனே இந்த வேலையை செஞ்சு முடிக்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று தான் இ-நாமினேஷன். பிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் இந்த வேலையை முடிக்க வேண்டும். பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது கணக்கில் நாமினி பெயரை இணைத்தால் அவரது இறப்பிற்கு பிறகு பிஎஃப் பலன்களை பெறலாம். ஒருவர் தனது பிஎஃப் கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி பெயரை இணைக்கும் வசதி தற்போது உள்ளது.

அவர்களுக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதையும் அதில் தேர்வு செய்து கொள்ள முடியும். இ-நாமினேஷன் செய்து முடிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டது. அதாவது கடந்த மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அந்த கால அவகாசம் முடிந்த பிறகும் ஆன்லைன் மூலமாக நாமினேஷன் செய்ய முடியும். இதனை செய்வது மிகவும் ஈஸியான வேலை தான். ஆன்லைன் மூலமாகவே இதனை செய்து முடித்துவிடலாம்.

அதற்கு முதலில் epfindia.gov.in என்ற இணையத்தள பக்கத்திற்குச் சென்று for service என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு mamber UAN/online service என்பதை கிளிக் செய்து உள்ளே சென்றால் உங்களுடைய பிஎஃப் நம்பர் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் மேனேஜ் டேபில் உள்ள e-nomination என்பதை கிளிக் செய்து அதில் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

இதனை முடித்த பிறகு “add family details”என்ற வசதியில் உங்களுடைய நாளில் பெயரை நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.

அதில் எத்தனை பேரை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இறுதியாக’E-Sign’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதனை பதிவு செய்தால் வேலை முடிந்துவிடும்.

எனவே பிஎஃப் கணக்கு வைத்துள்ள அனைவரும் தங்களது நிலையை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் என்பதால் உடனே இந்த வேலையை முடித்து விடுங்கள். இல்லை என்றால் உங்களுடைய பிஎஃப் பணம் வருவதில் சிக்கலாகிவிடும்.

Categories

Tech |