பொதுவாக கார் ஆட்டோ ஆகிவற்றில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு காப்பீட்டு நிறுவனங்கள் சார்பாக அளிக்கப்படும். இந்த நிலையில் பைக் டாக்ஸியில் பயணித்து விபத்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு கிடைக்காது என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இது கார் ஆட்டோ கட்டணங்களை விட மிகக் குறைவான கட்டணம் என்பதனால் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் பைக் டாக்ஸி நிறுவனங்கள் போக்குவரத்து சேவையை நடத்தி வருகிறது. தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்த இதுவரை அரசு அனுமதி அளிக்கவில்லை. இதில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்காது என்று தெரிவித்துள்ளனர்.